Image default
இதழ்கள் வெளியீடுகள்

புதிய சொல் 10

புதிய சொல்லின் வாசகர்களுக்குத் தோழமையான வணக்கம்,

புதிய சொல்லின் தொடக்க காலம் முதலாகவே நாம் ஈழத்து இதழ்களுக்கான சந்தைப்படுத்தலில் இருக்கின்ற குறைபாடுகள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கின்றோம். புதிய சொல் இதழ்களை தபால்மூலமாக ஈழத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கான பொறிமுறைகளை விரைவில் உருவாக்குவோம் என்ற எமது உறுதிமொழியும் இந்த அக்கறையினால் வந்ததே. அதன் தொடர்ச்சியாக புதிய சொல் இதழ்களை ஈழத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தபால் மூலமாக அனுப்பி வைக்கின்ற முறைமையினை நாம் தொடர்கிறோம்.

இவ்வாறாக தபால் மூலம் அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு பிரதிக்கும் 170 இலங்கை ரூபாய்கள் செலவாகும். தற்போது புதிய சொல்லின் ஏழாவது இதழ் முதல் பத்தாவது இதழ்வரை ( பத்தாவது இதழுடன் இணைப்பாக சிறு புத்தகமும் வருவதால் தபாற் செலவு 250 ரூபாய்கள் ஆகியிருக்கின்றது. மற்றைய இதழ்கள் 170 ரூபாய்கள்) மாத்திரமே இவ்வாறு கிடைக்கப்பெறும். அதே நேரம் இனி வரும் இதழ்களுக்கான முற்பணமாகவும் பணத்தினை அனுப்பி வைக்கலாம். இதழ்கள் தேவையானோர் பிரதி ஒன்றிற்கு 170 இலங்கை ரூபாய் என்ற வீதத்தில் பணத்தினை

பாலசுப்பிரமணியம் காண்டீபராஜ்
B.Kandeebaraj
Commercial Bank – Jaffna
8007949643

என்கிற கணக்கில் வைப்புச் செய்துவிட்டு, அதற்கான பற்றுச்சீட்டினை எந்தெந்த இதழ்களில் பிரதிகள் தேவை என்கிற விபரங்களுடனும் தபால் மூலம் அனுப்புவதற்கான முகவரியுடனும்

குணரட்ணம் பிரதீப்
மெய்கண்டான் ஒழுங்கை,
சரசாலை தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

என்கிற முகவரிக்கோ அல்லது puthiyasol@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.
தொடர்ச்சியான உங்கள் ஆதரவுடன் நாம் எமக்கான இலக்குகளை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம்.

தோழமையுடன்
புதிய சொல்

Related posts

புதிய சொல் 04

editor

புதிய சொல் 05

puthiyasol

புதிய சொல் 07

puthiyasol

Leave a Comment