லெப்ரினன் கேணல் இயற்கை -யதார்த்தன்
சிவலைக்கண்டு காணமற்போனதை லேசா எடுத்துக்கொள்ளேலாது, காலையில் பட்டியை விட்டு மாடுகளை விரட்டி ரோட்டுக்கு இறக்கும்போதே செல்லாச்சி சிவலைக்கண்டு நேற்றும் வாய்க்காலைத்தாண்டி வயலுக்குளை இறங்கினதை ஞாபகப்படுத்தினவா. நேரம் நாலுமணியாகியிருக்கும், மேற்கால வானம் செக்கச் சிவந்து போயிருந்தது.